பள்ளமான சாலை

Update: 2025-07-20 16:42 GMT

திருச்செங்கோடு தாலுகா கோக்கலை கிராமம் கோ.எளையாம்பாளையம் அம்மையப்பன் நகரிலிருந்து குருக்கபுரம் சாலையை இணைத்து ஹை ஸ்கூல் மேடு வரையில் உள்ள தார்சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தனியார் பள்ளி பஸ்கள், டிப்பர் லாரிகள் அதிகமாக செல்லும் வழித்தடமாக இந்த சாலை அமைந்துள்ளது. அவசர காலங்களில் மாவட்டத்தில் உள்ள நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு இந்த பிரதான சாலை வழியாக தான் செல்ல வேண்டும். மேலும் பள்ளி மாணவர்களும் கடும் அவதிப்படுகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி புதிய தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஊர் பொதுமக்கள், கோ.எளையாம்பாளையம்.

மேலும் செய்திகள்