குண்டும், குழியுமான சாலை

Update: 2025-07-13 17:59 GMT

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நான்கு ரோடு செல்லும் சாலை பராமரிப்பு இல்லாமல் குண்டும், குழியுமாக உள்ளது. மழைகாலங்களில் வாகனங்கள் அந்த வழியாக செல்வதால் சாலை மிகவும் சேதமடைகிறது. மேலும் மழை தண்ணீர் பள்ளத்தில் தேங்குவதாலும், அப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாததாலும் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் அந்த பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர். எனவே பெரிய விபத்து ஏற்படும் முன்பு மின்விளக்குகள், தரமான சாலை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-முருகன், பெரமனூர்.

மேலும் செய்திகள்