கொங்கணாபுரத்தில் இருந்து தாரமங்கலம் செல்லும் வழியில் சின்னப்பம்பட்டி பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தையொட்டி உள்ள வேகத்தடைக்கு வர்ணம் பூசவில்லை. இதனால் இரவில் வரும் வாகன ஓட்டிகள் வேகமாக வரும் போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன்பு இந்த வேகத்தடைக்கு வர்ணம் பூசி, ஒளிரும் பட்டைகளை பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சசிபைரவன், கொங்கணாபுரம்.