சேதமான சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2025-07-13 17:52 GMT

நாமக்கல் - திருச்சி சாலையில் பொன்விழா நகர் அமைந்து உள்ளது. இந்த பகுதிக்கு செல்ல பிரதான சாலையில் அலங்கார வளைவு இருக்கிறது. இந்த வளைவில் இருந்து பொன்விழா நகருக்கு ஏராளமானோர் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்த பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்றும் உள்ளது. இந்த பள்ளிக்கும் இந்த சாலை வழியாக ஏராளமான மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர்.இந்த பகுதிக்கு செல்லும் சாலை ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அடிக்கடி சிறு, சிறு விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளது. எனவே இந்த சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், நாமக்கல்.

மேலும் செய்திகள்