பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2025-07-13 17:36 GMT

கிருஷ்ணகிரி நகரில் சாலை விரிவாக்க பணிகளும், வடிகால் கட்டும் பணிகளும் நடந்து வருகின்றன. இதனால் 5 ரோடு முதல் காந்தி சிலைக்கு செல்லும் காந்தி ரோட்டில் ஒரு பகுதி முழுவதும் குழி தோண்டப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். பணிகள் மிகவும் மந்த நிலையில் நடைபெறுவதால் அந்த சாலையில் பஸ் போக்குவரத்து ஒரு வழிப்பாதையில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பெரிய வாகனங்களும் அந்த சாலையில் செல்ல முடிவதில்லை. குடியிருப்புவாசிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த பணிகளை விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தர்ணிஷ், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்