விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Update: 2025-07-13 10:50 GMT

பந்தலூர் அருகே புஞ்சைக்கொல்லி ஆட்டோ நிறுத்தம் முதல் மசூதி, கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்ட(ரேஞ்ச்-3) பகுதி வழியாக செம்பக்கொல்லிக்கு சாலை செல்கிறது. இந்த சாைல பல இடங்களில் உடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழை பெய்தால் அந்த குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளில் குழிகளில் ஏறி இறங்கும்போது நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்