பல்லடம் அருகே உள்ள சேடபாளையம்- நாரணாபுரம் பிரிவு வெட்டுப்பட்டான் குட்டைக்கு செல்லும் ரோடு புதுப்பிப்பதற்காக பணிகள் தொடங்கியது. இதற்காக ரோடு தோண்டப்பட்ட நிலையில் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. சாலை தோண்டப்பட்டதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். மேலும், விபத்துகளும் நடைபெற்று வருகின்றது. எனவே சாலையை உடனடியாக புதுப்பித்து போக்குவரத்திற்கு பயன்படும் வகையில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காலசாமி, பல்லடம்.