குண்டும், குழியுமான சாலை

Update: 2025-07-06 19:36 GMT

திருச்செங்கோடு அருகே கோ.எளையாம்பாளைம் மாரியம்மன் கோவில் அருகே சுடுகாடு முதல் துண்டுகாட்டூர் வரை உள்ள சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் எலச்சிபாளையம், கொன்னையார், மோர்பாளையம், பருத்திப்பள்ளி போன்ற ஊர்களுக்கு பள்ளி வாகனங்கள் செல்வதில்லை. இதனால் 5 கிலோ மீட்டர் சுற்றி பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அவசர தேவைக்குகூட பயன்படுத்த முடியாதபடி உள்ள சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-மதி, எலச்சிபாளையம்.

மேலும் செய்திகள்