பாலம் அமைக்கும் பணி விரைவு பெறுமா?

Update: 2025-06-22 12:06 GMT

கோவை நெம்பர் 2 கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட வட்டப்பாறை ேமடு பகுதியில் பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக அருகில் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டது. அந்த வழியாக வாகனங்கள் சென்று வருகிறது. ஆனால் பாலம் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. மாற்றுப்பாதையும் மோசமான நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே பாலம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது