பல்லடம் தாலுகா மாதப்பூர் ஊராட்சி செந்தில் நகர் பகுதியில் சுமார் 100 குடும்பங்களுக்கு மேல் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்தப்பகுதியில் கடந்த 6 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. குறிப்பாக தரமான தார்சாலை இல்லாததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே செந்தில் நகர் பகுதியில் தார் சாலை வசதி உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரவீன் குமார், பல்லடம்.