அறிவிப்பு பலகை அமைக்கலாமே!

Update: 2025-05-25 16:53 GMT

பனமரத்துப்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து சேலம் செல்லும் பிரதான சாலையில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகே அறிவிப்பு பலகை, ஒளிரும் எச்சரிக்கை விளக்குகள் பொருத்தப்படாமல் உள்ளது. இது அதிக அளவில் வளைவுகள் உள்ள சாலை என்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் இவை பொருத்தப்பட்டால் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். எனவே அறிவிப்பு பலகை, ஒளிரும் எச்சரிக்கை விளக்குகள் அமைக்க அதிகாரிகள் முன் வர வேண்டும்.

-கிருஷ்ணன், தாரமங்கலம்.

மேலும் செய்திகள்

சாலை பழுது