போக்குவரத்து இடையூறு

Update: 2025-05-25 16:48 GMT

நாமக்கல்-முதலைப்பட்டி பைபாஸ் மேம்பாலம் அருகில் சர்வீஸ் சாலை ஒன்று உள்ளது. இந்த சாலையில் லேசான மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருவதுடன், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சர்வீஸ் சாலையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

-சங்கர், நாமக்கல்.

மேலும் செய்திகள்

சாலை பழுது