புதிய தார்சாலை அமைக்கப்படுமா?

Update: 2025-05-25 16:46 GMT

வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மின்னக்கல்லில் இருந்து வாய்க்கால் பட்டறை செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி புதிய தார்சாலை அமைத்து தர அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

-மணிகண்டன், மின்னக்கல்.

மேலும் செய்திகள்

சாலை பழுது