மயானத்திற்கு சாலை வசதி

Update: 2025-05-25 16:31 GMT

தர்மபுரி செட்டிகரை கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு இக்கிராமத்தின் அருகே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் மயானம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் இறந்தால் அந்த மயானத்திற்கு எடுத்து செல்ல சாலை வசதி இல்லை. இதனால் ஏரி கரையின் ஓரத்திலும், சேறும், சகதியுமான ஒத்தையடி பாதையிலும் இறந்தவர்களின் உடலை எடுத்து சென்று மயானத்தில் பொதுமக்கள் அடக்கம் செய்து வருகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து மயானத்திற்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

-சிவா, செட்டிக்கரை.

மேலும் செய்திகள்

சாலை பழுது