பர்கூர் பேரூராட்சி 11-வது வார்டு கே.எஸ்.ஜி. தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு செல்லும் சிமெண்டு சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது அந்த சிமெண்டு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் செல்லவே வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். மேலும் நடந்து செல்லவோ இயலாத நிலையில் உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் தாமதம் இன்றி தரமான சிமெண்டு சாலை அமைத்து தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
-மாதேசன், பர்கூர்.