கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்றது. இதற்காக அந்த சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று பாதையில் விடப்பட்டன. இந்த நிலையில் அந்த சாலையில் பணிகள் நிறைவு பெற்று போக்குவரத்து தொடங்கி உள்ளது. ஆனாலும் சாலையில் பல இடங்களில் மேடு, பள்ளமாகவும், கற்களும் கிடக்கின்றன. மேலும் கட்டுமான பணிக்காக பயன்படுத்திய மரக்கட்டை உள்ளிட்ட பொருட்களும் ஆங்காங்கே இருக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்தி அங்கு புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பழனி, கிருஷ்ணகிரி.