துடியலூர் சேரன் காலனியில் பாதாள சாக்கடை அமைக்க சாலையில் குழி தோண்டப்பட்டது. ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அந்த குழியை மூடவில்லை. தற்போது மழை பெய்து வருவதால், அந்த சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் சிரமம் அடைகின்றனர். எனவே குழியை உடனடியாக மூடி சாலையை சீரமைத்து தர வேண்டும்.