குண்டும், குழியுமான சாலை

Update: 2025-05-25 11:13 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட உப்பட்டியில் இருந்து பழைய நெல்லியாளம் வரை சாலை உடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். தற்போது மழை பெய்து வருவதால் அந்த சாலையில் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்