ராசிபுரம் டவுன் நாமக்கல் ரோடு வழியாக நாமக்கல், திருச்செங்கோடு உள்பட பல்வேறு பகுதிக்கு இரு சக்கர வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையின் வழியாகத்தான் தினந்தோறும் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்கின்றன. நாமக்கல் ரோடு மிகவும் போக்குவரத்து உள்ள பகுதியாக விளங்குவதால் நாமக்கல் ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், அப்பகுதியில் வசிப்பவர்கள் ரோட்டை கடக்க அச்சப்படுகின்றனர். எனவே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல நாமக்கல் ரோட்டில் இரண்டு இடங்களில் வேகத்தடைகள் அல்லது பேரிகார்டு வைத்து விபத்தை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மன்னன், ராசிபுரம்.