கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து உத்தனப்பள்ளி செல்லும் சாலையில் ஏராளமான டிப்பர் லாரிகள் செல்கின்றன. இந்த லாரிகள் அதிவேகமாக செல்வதால் 2 சக்கர வாகன ஓட்டிகள் அந்த சாலையில் செல்ல அச்சமாக உள்ளது. குறிப்பாக அங்கு புதிதாக சாலை போடப்பட்டுள்ளதால் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்களும், 2 சக்கர வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் அவ்வழியாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அந்த சாலையில் வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில் வேகத்தடைகள் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல போலீசாரும் அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரமேஷ், உத்தனப்பள்ளி.