திருப்பூரின் வளர்மதி பாலத்திலிருந்து ஈஸ்வரன் கோவிலுக்கு செல்லும் நொய்யல் நதிக்கரையோர சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இரவில் வரும் வாகனங்கள் குழி இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். வேகமாக வந்து குழி இருப்பதை பார்த்து உடனடியாக பிரேக் அடிக்கும் போது பின்னால் வரும் வாகனம் மோதி விபத்து ஏற்படுகிறது. எனவே குழியை மூட வேண்டும்.