சேலம் மாமாங்கம்-கருப்பூர் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக போக்குவரத்து அதிகம் உள்ள நேரங்களில் இந்த இடத்தை கடப்பதற்கு 15 நிமிடம் ஆகிறது. எனவே தாமதமாகும் இந்த மேம்பால பணியை விரைவாக முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோவிந்த், கருப்பூர்.