ஓமலூர்-தாரமங்கலம் சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தை இருசக்கர வாகன ஓட்டிகள் முதல் கனரக வாகன ஓட்டிகள் வரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மேம்பாலத்தில் உள்ள சாலையில், சாலையை இரண்டு பாகங்களாக பிரிக்கும் வெள்ளை வர்ணம் பூசப்படாமலும், ஒளிரும் பட்டைகள் பொருத்தப்படாமலும் உள்ளது. இதனால் விபத்துகள் நடக்கும் அபாயமும் உள்ளது. இதனை அதிகாரிகள் கவனித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஹரி, ஓமலூர்.