அரூர் பஸ் நிலையத்திற்கு தினசரி 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் பஸ் அதிவேகமாக வந்து செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஒரு சில விபத்துக்கள் நடந்து உயிர் பலி ஏற்பட்டுள்ளது. எனவே பஸ் நிலைய நுழைவாயில் பகுதியில் விபத்துகளை தடுக்கும் வகையில் வேகத்தடைகள் அவசியம் அமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
-ராம், அரூர்.