கிருஷ்ணகிரி நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக சாலையோரம் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக கிருஷ்ணகிரி நகரில் சென்னை சாலையில் ஒரு பகுதி முழுவதும் சாலை அடைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த பணிகள் நடப்பதால் பர்கூர், சென்னை செல்லும் வாகனங்கள் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் சப்-ஜெயில் சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படுகிறது. எனவே நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்னை சாலையில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வருவார்களா?
-பிரபு, கிருஷ்ணகிரி.