சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2025-05-11 15:20 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் டவுன் பகுதியில் இருந்து பேரிகை செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக சூளகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் பேரிகை பிரிவு சாலை பெரிய பள்ளத்துடன் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்ல கூடிய வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக இரவு நேரத்தில் பலரும் சாலையில் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. அந்த சாலையை சீரமைக்க கோரி பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சூளகிரி டவுன் பகுதியில் பேரிகை பிரிவு சாலையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

-பசவேஸ்வரன், சூளகிரி.

மேலும் செய்திகள்