சாலை பணிக்கு இடையூறு

Update: 2025-05-04 17:14 GMT

ஓசூர்-தளி சாலையில் 12 கி.மீ. தூரத்திற்கு சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விரிவாக்க பணிகள் நடைபெறும் எல்லைக்குட்பட்ட அந்திவாடி பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் சாலையின் நடுவே அமைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பல முறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கோவிலை அகற்ற புகார் தெரிவித்தும் கோவிலை அகற்றாத காரணத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக சாலை விரிவாக்க பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே சாலை பணிகளை விரைந்து முடிக்க கோவிலை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-மாதப்பன், ஓசூர்.

மேலும் செய்திகள்