சாலை பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2025-05-04 17:12 GMT

கிருஷ்ணகிரியில் 5 ரோட்டில் இருந்து சென்னை செல்லும் சாலையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்டன. இதனால் இந்த சாலை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சென்னை சாலையில் செல்லும் வாகனங்களும், பர்கூர் செல்லும் வாகனங்களும் சுற்றி செல்கின்றன. இதனால் சப்-ஜெயில் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. தற்போது பணிகள் ஏறத்தாழ முடிவு பெற்றும் சாலை பயன்பாட்டிற்கு இன்னும் வரவில்லை. எனவே 5 ரோட்டில் இருந்து சென்னை செல்லும் பிரதான சாலையில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கார்த்திக், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்