அடிக்கடி விபத்து

Update: 2025-04-27 14:48 GMT

ஓமலூரில் இருந்து தாரமங்கலம் செல்லும் வழியில் ஏரிக்கரை பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த சாலையை அடுத்துள்ள பிரிவு ரோடானது செட்டிப்பட்டிக்கு செல்லும் வழியாகும். ஏரி கரையை ஒட்டி இந்த சாலை குறுகிய நிலையில் உள்ளதாலும், இரவு நேரங்களில் போதுமான வெளிச்சம் இல்லாததாலும் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் அதிகளவில் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே விபத்துகளை தடுக்க ஏரியை ஒட்டி இரும்பு தடுப்புகள் அமைக்கவும், போதுமான மின்விளக்குகள் ஏற்படுத்திக் கொடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சாமிநாதன், ஓமலூர்.

மேலும் செய்திகள்