வாகன ஓட்டிகள் அவதி

Update: 2025-04-27 14:43 GMT

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பொரசபாளையம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலை அமைக்கப்பட்டது. தற்போது அந்த சாலை சேதமாகி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில் காணப்படுவதால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மோகன், நாமக்கல்.

மேலும் செய்திகள்