கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியில் இருந்து சூளகிரிக்கு ஏராளமான டிப்பர் லாரிகள் சென்று வருகின்றன. ஜல்லிக்கற்களை ஏற்றி செல்லும் இந்த டிப்பர் லாரிகளில் இருந்து சாலைகள் முழுவதும் ஜல்லிக்கற்கள் சிதறி விழுகின்றன. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்படுகிறார்கள். குறிப்பாக சாலைகளில் சிதறி கிடக்கும் ஜல்லிக்கற்களில் இருசக்கர வாகனங்கள் செல்லும்போது விபத்துகளும், வாகனங்கள் அடிக்கடி பழுதும் ஏற்படுகின்றன. எனவே ஜல்லிக்கற்களை ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகள் பாதுகாப்பாக பின்னால் தார்பாயால் மூடியபடி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முனிராஜ், சூளகிரி.