தர்மபுரி-சேலம் பைபாஸ் சாலையில் இருந்து இருசன் கொட்டாய் கிராமத்திற்கு செல்லும் தார்சாலை தொடங்குகிறது. இந்த தார்சாலையில் பல்வேறு பகுதிகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலை வழியாக தினமும் தர்மபுரி, அதியமான் கோட்டை பகுதிகளுக்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே இந்த தார்சாலையில் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க விரைவான நடவடிக்கை எடுப்பார்களா?
-முனிராஜ், அதியமான்கோட்டை.