பாலக்கோடு அடுத்த சோமனஅள்ளி நெடுஞ்சாலை தர்மபுரி-பாலக்கோட்டிற்கு செல்லும் முக்கிய சாலையாகும். இந்த சாலையானது சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்ல முடியாமல் தடுமாறி வருகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த சாலையை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-முருகன், சோமனஅள்ளி.