கோவை திருச்சி சாலை காமாட்சிபுரம் பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் சாலையில் குடிநீர் தேங்கி வருகிறது. அத்துடன் சாலை சேறும், சகதியுமாக கிடப்பதோடு சேதம் அடைந்தும் வருகிறது. அதில் இரும்பு தடுப்பு வைத்து உள்ளனர். இதனால் அந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். எனவே குழாய் உடைப்பை சரி செய்வதோடு சாைலயையும் சீரமைத்து தர வேண்டும்.