பண்ருட்டி அருகே திருவதிகையில் வேகத்தடை உள்ளதை வாகனஓட்டிகளுக்கு எச்சரிக்கும் வகையில் பலகை அமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் வேகத்தடையில் இடறி விபத்துகளில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே விபரீதம் ஏதும் நிகழும் முன் எச்சரிக்கை பலகை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிரிபார்க்கின்றனர்.