பெருந்துறை முகமதியர் வீதி, பொடிமட்டக்கார வீதி மற்றும் மசூதி வீதி ஆகிய வீதிகளில் குடிநீர் குழாய், கியாஸ் குழாய் மற்றும் பாதாள சாக்கடை குழாய் ஆகியவற்றை அமைக்க சாலைகள் தோண்டப்பட்டன. ஆனால் சாலைகள் இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு செல்கிறார்கள். இந்த சாலைகளை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.