நாமக்கல் மாநகரில் பிரதான சாலை ஒரு வழிப்பாதையாக உள்ளதால் திருச்செங்கோடு சாலை, சேலம் சாலை ஆகியவற்றில் செல்ல கூடிய கார், கனரக வாகனங்கள், பஸ்கள் ஆஞ்சநேயர் கோவில் சாலை வழியாக வருகின்றன. இந்த வாகனங்களும், பிரதான சாலையில் இருந்து திருச்செங்கோடு சாலை, சேலம் சாலை செல்லும் இருசக்கர வாகனங்களும் சந்திக்கும் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் பணியில் இருந்த போதிலும் மிகுந்த நெருக்கடி ஏற்படுகிறது. எனவே அங்கு போக்குவத்து நெரிசலை தவிர்க்க சிக்னல் அமைக்க வேண்டும். மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.