வேலூர் சைதாப்பேட்டையில் புது வீட்டு பக்கிரி சாய்பு தெருவில் பஜனை கோவில் அருகில் கழிவுநீர் கால்வாய் மீது சில மாதங்களுக்கு முன் சிறுபாலம் அமைக்கப்பட்டது. பாலத்தின் அருகில் சாலை அமைக்கப்படாததால் பள்ளமாக உள்ளது. பாலத்துக்கும் சாலைக்கும் இடையே உள்ள இணைப்பு பகுதி சமமாக இல்லாமல், மேடு பள்ளமாக உள்ளது. இதனால் பள்ளமான சாலையில் இருந்து பாலத்தின் மீது சாதரணமாக செல்ல முடியாமல் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே பள்ளமாக உள்ள சாலையைச் சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுப்பிரமணியம், வேலூர்.