விருத்தாசலம் அருகே பரவலூர் கிராமத்தில் உள்ள சாலையானது பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலையில் உள்ள ஜல்லி கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே உருவாகியுள்ள பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து அடிக்கடி விபத்தை சந்தித்து வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.