விபத்து அபாயம்

Update: 2026-07-19 13:40 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட மேங்கோரேஞ்ச் பகுதியில் முனீஸ்வரன் கோவில் அருகில் இருந்து உப்பட்டிக்கு சாலை செல்கிறது. இந்த சாலையோரத்தில் தேயிலை தோட்ட ஆஸ்பத்திரி அருகே பெரிய பள்ளம் காணப்படுகிறது. இதை ஒட்டி தடுப்புச்சுவர் எதுவும் இல்லை. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகனங்கள் அந்த பள்ளத்தில் தவறி விழும் அபாயம் உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே அங்கு தடுப்புச்சுவர் கட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்