புத்தேரி நான்கு வழிச்சாலையில் மேம்பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் சரியான வழிகாட்டி பலகைகள் மற்றும் மின்விளக்குகளும் அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வரும் வெளிமாவட்ட வாகன ஓட்டிகள் வழிகாட்டி பலகை இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அந்த பகுதியில் வழிகாட்டி பலகையும், மின்விளக்குகளும் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வகுமார், தென்தாமரைகுளம்.