அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் முதல் கடம்பூர் வரை சாலை அகலப்படுத்தும் பணி தொடங்கப்பட்டு, சில மாதங்களாகியும் பணி முழுமையாக நடைபெறாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்வதுடன், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.