கடலூர் மஞ்சக்குப்பம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் இருந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு செல்லும் சாலையின் குறுக்கே வடிகால் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் கரையோரம் தடுப்புச்சுவர் இல்லாததால், வாகன ஓட்டிகள் அங்குள்ள வளைவில் திரும்பும் போது வாய்க்காலுக்குள் விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையோரம் தடுப்புச்சுவர் அமைப்பது அவசியம்.