சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2026-09-27 06:08 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை கொத்தகம் வழியாக தஞ்சை - புதுகை தேசிய நெடுஞ்சாலை வரை உள்ள 2 கிலோமீட்டர் தார்சாலை கப்பிக்கற்கள் பெயர்ந்து பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் சிரமப்படுவதுடன், மழைக்காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்குவதால் மேலும் சிரமம் ஏற்படுகிறது. எனவே இச்சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்