நடைபாதையில் குழி

Update: 2026-07-19 13:38 GMT

பந்தலூர் பழைய பஸ் நிலைய பகுதியில் வங்கி அருகே நடைபாதையில் குழி ஏற்பட்டு உள்ளது. அந்த குழியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் குழிக்குள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. மேலும் அதில் தேங்கியுள்ள தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த குழியை உடனடியாக மூட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்