கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2026-07-19 14:05 GMT

கரூர் மாவட்டம் சின்ன ஆண்டாங்கோவில் அரவிந்த் நகர் சாலையில், கழிவுநீர் வாய்க்கால் பாலத்தின் மீது தார்சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. ஆனால், நீண்ட நாட்களாகியும் தார்சாலை அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அப்பகுதி குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன்பு, இந்த சாலை பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்