வாகன ஓட்டிகள் அவதி

Update: 2026-07-19 12:14 GMT

அரியலூர் - ஜெயங்கொண்டம் சாலையில் அஸ்தினாபுரம் முதல் வி.கைகாட்டி வரை முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெறும் நான்கு வழிச் சாலை பணி ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. குறிப்பாக அஸ்தினாபுரம் மாதிரி பள்ளி அருகில் இரு சிறுபாலங்கள் கட்டும் இடத்தில் போதிய எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படவில்லை. மேலும் மாற்றுப் பாதையில் ஜல்லிக்கற்கள் மட்டுமே கொட்டப்பட்டு தண்ணீர் தெளிக்காததால், இரவு நேரங்களில் பறக்கும் புழுதியால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்