சென்னை விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மது குடிக்கும் மதுபிரியர்கள் குடித்துவிட்டு கண்ணாடி பாட்டில்களை அங்கேயே சாலையில் வீசிச்செல்கின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பெண்களும், குழந்தைகளும் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.