சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி எதிரே ஏராளமான கடைகள் உள்ளன. ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளுக்கு, உறவினர்கள் அந்த பகுதியில் சாப்பாடு போன்ற பொருள்கள் வாங்கி வருவார்கள். ஆனால் அங்கு அதிகமாக தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. மேலும் கடைகளுக்கு வரும் பொதுமக்களையும் துரத்தி கடிக்க பாய்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.