தார்ச்சாலை அமைக்கப்படுமா?

Update: 2026-09-13 07:57 GMT

கன்னியாகுமரி அருகே வரலாற்று சிறப்பு மிக்க வட்டக்கோட்டை அமைந்துள்ளது. இந்த கோட்டைக்கு செல்லும் சாலையில் சிறிது தூரத்தில் வடக்குபுறம் குறுகிய மண் சாலை ஒரு கிறிஸ்தவ ஆலயத்தை சென்றடைகிறது. இந்த ஆலயத்திற்கு தினமும் வடஇந்திய சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் தார் சாலை வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சுற்றுலா பயணிகள் வசதிக்காக இந்த ஆலயத்திற்கு தார்ச்சாலை வசதி ஏற்படுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அனந்தநாராயணன், கன்னியாகுமரி.

மேலும் செய்திகள்